பரிணாம வளர்ச்சியில் மனிதனின் பங்கு விசித்திரமானது. சிந்திக்கத் தெரிந்த அவனின் மூளைத்திறன்
பல்வேறு களத்தில் மெருகேறி.... விஞ்ஞானம், மருத்துவம்
என வாய்ப்பிளக்க வைக்கிறது.... பஞ்சபூதங்களுக்கும் பயந்த காலம் போய் இன்று பஞ்சபூதங்களையும் அடக்கும்
அளவிற்கு மனிதப் புரட்சி மாண்பு பெற்றுள்ளது.... புறாவிடு
தூது, மயில் விடு தூது எல்லாம்..... புது ஜென்மம் எடுத்து
டிஜிட்டல் தூதுவர்களாய் நம் கைக்குள் அடங்கிவிட்டது. உலகத்தின் எல்லா நொடிகளும் கவனமாய் நம் கைக்குள்
வந்துவிடுகிறது. இந்தத் தொலைநோக்குத் தொழில்நுட்பங்கள் நம் தூரத்தையே குறைத்துவிட்டது. அல்லது தூரங்களே
இல்லாமல் செய்துவிட்டது. உள்ளங்கையில் உலகத்தைச் சுழற்றுவதைப் புராணத்தில் படித்திருக்கிறோம்... ஆனால் இன்று.... நிஜமாகவே உலகம் நம் விரல்நுனியில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. கைப்பிடி
அளவில் உலகம் கைப்பேசிக்குள் சுருங்கிவிட்டது. மனிதனின் மூன்றவது கண்ணாகவே இந்தக் கைப்பேசி
செயல்படுகிறது. அத்தகைய கைப்பேசி உலகின் நவீன அவதாரமாக பரிணமித்திருப்பதே ‘ஸ்மார்ட் போன்’ எனப்படும்ஆண்ட்ராய்டு வகை போன்கள். தற்போது வளர்ந்துவரும்
தொழில்நுட்பத்துறையில் மிகவும் முன்னணியில் இருப்பது இந்த மொபைல்சார் நிறுவனங்களே.... இது சார்ந்த தொழில்நுட்பத் தகவல்களைத் தருவதே இந்த வலைப்பூவின் நோக்கம்..... தகவல் பெற விரும்புவோரும், தகவல் தர விரும்புவோரும் எங்களோடு இணையுங்கள்....
www.androidclinik.blogspot.com
நன்றி....
- சண்.சிவா
www.androidclinik.blogspot.com
நன்றி....
- சண்.சிவா