Logo Design by FlamingText.com
Logo Design by FlamingText.com

Friday, May 15, 2015

ஆப்பிள் தமிழ்


ஆப்பிள் நிறுவனத்தின் iOS 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் (operating system) தமிழ்மொழிச் செயல்பாட்டினை சேர்த்து கட்டமைத்துள்ளது. இதன் மூலம் எந்த ஒரு தமிழ் மென்பொருளை நிறுவாமலேயே தமிழை நேரடியாக பயன்படுத்த முடியும். இதில் தமிழ் 99, அஞ்சல் கீ போர்ட்கள் இணைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
உங்களுக்கு விருப்பமான கீபோர்ட்டைப் தேர்ந்தெடுத்து தமிழை நேரடியாக ஆப்பிள் போனிலேயே உள்ளிட முடியும். இதே முறையை இனி ஐபாட் (iPad), ஐபோட் (iPod) சாதனங்களில் பயன்படுத்தி தமிழை உள்ளீடு செய்யலாம். ஆப்பிள் சாதனத்துடன் இணைத்துக் கிடைக்கும் பேஸ்புக், ட்விட்டர் வாட்ஸ்அப் (Whats up) போன்ற சமூக இணையதளங்களிலும் இதன் மூலம் தமிழைப் பயன்படுத்த முடியும். தமிழிலேயே தட்டச்சிட்டு தேடுதல் வேலைகளையும மேற்கொள்ள முடியும்.

தமிழை இயங்குதளத்துடன் கொண்ட iphone5 ல் உள்ள வசதிகள்:
 Mutitouch Screen: 4 இன்ச் மல்டி டச் ஸ்கிரீன் அமைந்துள்ளது. நானோ சிம்களைப் பயன்படுத்தும் வசதி. தமிழ் மொழி உட்பட உலக மொழிகளைப் பயன்படுத்தும் வசதி... முன்கூட்டியே சொற்களைத் தரும்

predictive text வசதி.. பல மொழிகளுக்கான dictionary வசதி...

தமிழை இயங்குதளத்துடன் கொண்ட iphone5 ன் சிறப்பு கூறுகள்:
1. Processor: கிட்டத்தட்ட நூறுகோடி டிராஸ்சிஸ்டர்கள் கூடிய 64 பிட் பிராச்சர் இதில் உள்ளது.
 2. Touch ID: விரல் ரேகை சென்சார் வசதி இதில் உள்ளது. பயனர்கள் இதன் மூலம் மற்றவர்கள் போனைப் பயன்படுத்தாமல் தடுக்க முடியும். இந்த வசதி தேவையில்லையெனில் நான்கு இலக்க பாஸ்வேர்ட் கொடுத்தும் வைத்துக்கொள்ளலாம். அல்லது பாஸ்வேர்ட் இல்லாமல் கூட இயக்கலாம்.
3. Battery: தொடர்ந்து 10 மணி நேரம் 3G ல் இயங்கக்கூடிய திறன் மிக்க பேட்டரி இதில் அமைந்துள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 மணி நேரம் மின்சக்தியை கொடுக்கவல்லது. இந்த மின்சக்தியைப் பயன்படுத்தி 40 மணி நேரம் ஆடியோ கேட்டு ரசிக்கலாம்.
 4. Camera: 28 மெகா பிக்சல் திறன் கொண்ட கேமரா (28 MP camera)இதில் உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் லென்ஸ் இதில் இயங்குகிறது. ஒரு வினாடியில் 10 படங்கள் எடுக்கும் Burstmode வசதி இதில் உள்ளது. மேலும் முகம் அறிந்து இயக்கும் வசதி.. ஆட்டோமேட்டிக் போகஸ் வசதி உள்ளது. வீடியோவில் நொடிக்கு 30 பிரேம்களை பதிக்கும் வேகம் இதில் உள்ளது.
5. 64 bit A7 Chip processor : இதில் உள்ள 64 பிட் A7 Chip இதற்கு முன் இருந்த ப்ராசசர்களைக் காட்டிலும் 56 மடங்கு வேகமாக இயங்க கூடியது. இதனால் iphone S5 ஐந்து மடங்கு வேகத்தில் இயங்கும். அத்தோடு இதனுடன் Motion Coprocessor என்ற சிப் ஒன்றும் உள்ளது. இது ஆப்பில் போனில் உள்ள பல அப்ளிகேஷன் புரோகிராம்களின் வேகத்தை அதிகப்படுத்துகிறது.
 6. கட்டண அப்ளிகேஷன்கள் முற்றிலும் இலவசம்: இதற்கு முன்பு கட்டணம் செலுத்திப் பெறப்பட்ட அப்ளிகேஷன்களான Numbers, Keynote, Iphoto, iMovie apps, Apple's Pages போன்றவை இப்பொழுது இலவசமாகவே இப்போனுடன் இணைத்துத் தரப்படுகின்றன.

ஐபோன் 5 ஸ்மார்ட்போனின் சிறப்பு கூறுகள் ஆங்கிலத்தில்: 
Apple iPhone 5 Short Specifications:
 4Inch Retina Display
Nano SIM
A6 Quad Core Processor
1GB RAM
8MP Camera
Facetime HD Camera
Bluetooth 4.0
New Lightning Dock
SIRI

No comments:

Post a Comment