Logo Design by FlamingText.com
Logo Design by FlamingText.com

Saturday, May 16, 2015

கேட்ஜெட்: மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க்!(Micromax Canvas Spark)
மீபகாலமாக பட்ஜெட் ஸ்மார்ட் போன்களின் மார்க்கெட் அதிகரித்துள்ளது. மோட்டோரோலா, லெனோவா, ஷியோமி போன்ற பெரிய பிராண்ட்களின் போட்டியும் இந்த பட்ஜெட் ஸ்மார்ட் போன் மார்க்கெட்டில் அடங்கும். அந்த வகையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட் போனான மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க் ஸ்மார்ட் போனை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
டிசைன்:
இது பட்ஜெட் ஸ்மார்ட் போனாக இருந்தாலும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் டிசைனுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இந்த போன் ‘பிரீமியம்’ டிசைனைக் கொண்டு உள்ளது. இந்த போன் இரண்டு மாடல்களில் வருகிறது. ஒன்று White/Gold கலர் காம்பினேஷன். மற்றொன்று Grey/Silver கலர் காம்பினேஷன். இந்த ஸ்மார்ட் போனின் அடர்த்தி 8.5mm மற்றும் எடை 134 கிராம்.
டிஸ்ப்ளே:
4.7 இன்ச் IPS 16M 540x960 டிஸ்ப்ளேவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போனில் ‘Ambient Light’ சென்ஸாரும் அடங்கும். இந்த சென்ஸார் வெளிச்சத்துக்கு ஏற்ப ஸ்க்ரீனின் பிரகாசத்தை மாற்றி அமைக்கும் தன்மையைப் பெற்றுள்ளது. பொதுவாக, அதிக விலை ஸ்மார்ட் போனில் இடம்பெறும் இந்த சென்ஸார், ஒரு பட்ஜெட் ஸ்மார்ட் போனில் கிடைப்பது சிறப்பம்சம்தான். மேலும், இந்த டிஸ்ப்ளே பாதுகாப்புக்காக ‘Corning Gorilla Glass 3’யைப் பெற்றுள்ளது.
தொழில்நுட்பம்:
இந்த ஸ்மார்ட் போன் MediaTek MT6582 SoC பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது. இந்த 1.3GHz Quad-core பிராசஸருடன் 1GB ரேமும் இந்த ஸ்மார்ட் போனில் அடங்கும். Mali 400 என்ற பிரத்யேக கிராபிக்ஸ் பிராசஸரும் அடங்கும். 8GB இன்டர்னல் மெமரியை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போனின் மெமரியை 32GB வரை SD கார்டு மூலம் விரிவுப்படுத்திக் கொள்ளலாம்.
கேமரா:
இந்த ஸ்மார்ட் போன் 8MP பின்புற கேமராவை கொண்டுள்ளது. பிளாஷ் வசதியும் அடங்கும். மேலும், 2MP முன்புற கேமரா செல்ஃபி எடுக்க போதுமானதாக இருக்கிறது.
இயங்குதளம்:
இந்த ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வெர்ஷனான ஆண்ட்ராய்ட் Lollipop இயங்குதளத்தைக் கொண்டு இயங்குகிறது. High-end ஸ்மார்ட் போன்களுக்கே இந்த இயங்குதளம் கிடைக்காத நிலையில், இந்த பட்ஜெட் ஸ்மார்ட் போனுக்குக் கிடைப்பது சிறப்பம்சம்தான்.
பேட்டரி:
இந்த ஸ்மார்ட் போன் 2000 mAh பேட்டரியைக் கொண்டு இயங்குகிறது. சுமார் ஏழு மணி நேரம் வரை இந்த பேட்டரி செயல்படும் என்று எதிர்ப்பார்க்கலாம்.
இந்த ஸ்மார்ட் போனின் இந்திய விலை ரூபாய் 5,000.

 நன்றி...

No comments:

Post a Comment