Logo Design by FlamingText.com
Logo Design by FlamingText.com

Monday, May 18, 2015

மாணவர்களுக்கு பயனுள்ள அப்ளிகேசன்கள்




டாஸ்கர் : அன்றாட பணிகளை பட்டியலிட்டு செய்ய உதவுகிறது இந்த அப்ளிகேசன். இதன் மூலம் எல்லா பணிகளையும் வரிசைப்படியும், மறக்காமலும் செய்யலாம். 

மேலும் அந்த பணிகளுக்கு இடையூறாக இருக்கும் சில தடங்கல்களையும் தடுக்கிறது டாஸ்கர். அதாவது நீங்கள் நூலகத்தில் இருக்கும் நேரத்தை குறிப்பிட்டு இருந்தால் அந்த நேரத்தில் உங்கள் ஸ்மார்ட்போன், 'சைலன்ட் மோடு'க்கு தானாகவே மாற்றப்பட்டுவிடும். விவாதத்தில் அல்லது சினிமா போன்ற நிகழ்வுகளில் இருக்கும்போது அழைப்புகள் வந்தால், எந்தெந்த எண்களுக்கு என்னென்ன பதில்களை எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும் என்றும் இதில் பதிவு செய்து வைக்கலாம். இன்னும் செல்போனில் எந்தெந்த வசதிகள் செயல்பாட்டில் (ஆன்) இருக்கின்றன என்பதையும் இது பட்டியலிடும். இதனால் தேவையற்ற அப்ளிகேசன்களை இயக்காமல் நிறுத்தி வைத்து பேட்டரியின் சக்தியை சேமிக்கலாம். முதல் சில நாட்களுக்கு இலவசமாகவும், பின்னர் 5 டாலர் விலையிலும் இந்த அப்ளிகேசனை பயன்படுத்த முடியும்.

கோர்ஸ்எரா  (Coursera): 
உங்களையும், உலக அளவில் சிறந்த மாணவர்கள், ஆசிரியர்கள், வாசிப்பாளர்களையும் இணைக்கும் சமூக வலைத்தளம்போல செயல்படுகிறது இந்த அப்ளிகேசன். உலகின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களின் இணையதள வகுப்புகள், கல்வி ஆலோசனைகள் இதில் இடம் பெறுகிறது. எங்கேயிருந்தும், எப்போது வேண்டுமானாலும் குறிப்பிட்ட பாடத்திட்டங்கள் பற்றிய விரிவுரையை இந்த அப்ளிகேசன் வழியே பார்த்து பயன்பெறலாம். உங்கள் கேள்விகளையும் பதிவு செய்து பதில்களை பெற முடியும்.

குயிக்ஆபீஸ் (QuickOffice): மைக் ரோசாப்ட் ஆபீஸ் போல, சில திட்டப் பணிகளுக்கு உதவுகிறது குயிக்ஆபீஸ். இதில் வேர்டு டாகுமென்ட், ஸ்பிரெட்ஷீட், பிரசன்டேசன் போன்ற கோப்புகளை உருவாக்கவும், எடிட் செய்து அனுப்பவும் முடிகிறது.  

ஸ்லைடு சேர் (Slide Share): உங்கள் கற்பனைக்கு ஏற்ப, 'பிரசன்டேசன்' கோப்புகளை உருவாக்க உதவுகிறது இந்த அப்ளிகேசன். விருப்பம்போல வாழ்த்துகளையும், மீம்ஸ்களையும் உருவாக்கவும், எடிட் செய்யவும் முடியும். இதற்கு இணையதளம் தேவையில்லை.

டிரைப் ஸ்போர்ட்ஸ்(Tribe Sports):-  மிகப்பெரிய விளையாட்டு குழுமத்தில் ஒன்று டிரைப் ஸ்போர்ட்ஸ். ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்காக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அப்ளிகேசன் இது. உங்களது விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியை ஜி.பி.எஸ். நுட்பத்துடன் கண்காணித்து மதிப்பிடுவது இதன் சிறப்பு. நீங்கள் எவ்வளவு நேரம் உடற் பயிற்சி செய்தீர்கள், கிரிக்கெட்டில் எத்தனை ரன்கள் எடுத் தீர்கள், வேறு விளையாட்டுகளில் உங்கள் திறன் எவ்வளவு என்பதை பதிவு செய்து வந்தால், சில ஒப்பீட்டு தகவல்களை காட்டும். கடந்த வாரம் எவ்வளவு நேரம் பயிற்சி செய்தீர்கள், இந்த வாரம் எவ்வளவு பயிற்சி செய்தீர்கள், முன்னேற்றம் எவ்வ ளவு? என்பதுபோன்ற விவரங்களை பட்டியலிடும். அதற்கேற்ப நமது ஆட்டத்திறன் மற்றும் பயிற்சியை மேம்படுத்த முடியும்.

கால்கு(CALCU): 
வழக்கமான கணக்குப்போடும் வேலையை செய்யும் அப்ளிகேசன்தான் என்றாலும் சில புதுமைகளை இதில் உணரலாம். சாதாரண கணக்கு முதல், ஆழ்ந்த அறிவியல் கணக்கீடுகள் வரை செய்ய முடியும். மேலும் குறிப்பிட்ட அளவுக்கு நாம் செய்த கணக்கீடுகளை சேமிப்பாகவும் காட்டக்கூடியது. 

மின்ட் (Mint):  வரவு செலவு திட்டமிடலுக்கு சிறந்த அப்ளிகேசன் இது. உங்கள் வரவு செலவை இதில் பதிவு செய்து கொண்டே வந்தால், அது ஒரு பட்டியலை தயாரிக்கும். எதற்காக அதிகம் செலவிடுகிறோம், புத்தகம் வாங்குவதற்கும், சினிமா பார்ப்பதற்கும் கடந்த முறையைவிட இந்த முறை எவ்வளவு செலவிட்டிருக்கிறோம் என்பது போன்ற ஒப்பீட்டு பட்டியலை காண்பிக்கும். இதன் மூலம்  நமது அவசியமற்ற செலவை தெரிந்து கொண்டு வரவு செலவை திட்டமிட்டு, கூடுதலாக சேமிக்க முடியும். ரகசிய குறியீட்டு எண்ணின் மூலமாகவே இதை திறக்க முடியும் என்பதால், செல்போன் தொலைந்தாலோ அல்லது நண்பர்கள், உறவினர்கள் பயன்படுத்தினாலோ உங்கள் கணக்கை திறந்து பார்க்க முடியாது. மாணவர்களுக்கு மட்டுமல்ல, குடும்பஸ்தர்களுக்கும் ஏற்றதுதான் மின்ட் அப்ளிகேசன்.

சன்ரைஸ் (Sunrise) : இதுவும் ஒரு பணி விவர பட்டியல் அப்ளிகேசன்தான். பல்வேறு தளங்களில் கிடைக்கும் காலண்டர் அப்ளிகேசன்களின் சிறப்புகள் இதில் ஒட்டு மொத்தமாக இருக்கிறது. ஸ்மார்ட்போனின் முகப்பு பக்கத்தை அலங்கரிக்கும் வசதியும் இதில் உள்ளது.

ஐ.எப்.டி.டி.டி. (IFTTT):  
இப் திஸ் தென் தேட்  (If This Then That)   என்ற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கம்தான் இந்த அப்ளிகேசனின் பெயர். இது தட்பவெப்பநிலை சார்ந்த சில அறிவிப்புகளை முன்கூட்டியே மின்னஞ்சலாக நமக்கு தரும். மேலும் வலைத்தளங்களில் நாம் வெளியிடும் படங்களை, தானாகவே நமது செல்போன் திரையிலும் இடம் பெறச் செய் கிறது இந்த அப்ளிகேசன்.

எவர்நோட்(Evernote): ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் களில் பரவலாக பயன்படுத்தப்படும் அப்ளிகேசன் இது. குறிப்பு எடுக்கவும், புகைப்படம் எடுக்கவும், பணிகளை பட்டியலிட்டு அறிவிக்கவும், ஒலி மூலமாகவே பணிகளை நினைவூட்டவும் இந்த அப்ளிகேசனில் வசதி உள்ளது. மேலும் இதில் நமது கையெழுத்திலேயே குறிப்பெடுக்கவும் வழி இருக்கிறது. நமது கையெழுத்து மாதிரியை படம் பிடித்து அனுப்பினால், அதன் பிறகு நாம் பதிவு செய்யும் குறிப்புகள் அனைத்தும் நமது கையெழுத்திலேயே பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறுவன தலைவர்களுக்கு உதவும் 5 ஆப்ஸ்கள்!



துநாள்வரை ஒரு லேப்டாப்பை வைத்து நாம் செய்த பல வேலைகளை, இப்போது ஒரு செல்போனை வைத்து செய்துவிட முடிகிற அளவுக்கு தொழில்நுட்பம் மாறியிருக்கிறது. இந்த மாற்றத்துக்கு அடிப்படையாக இருக்கின்றன சில ஆப்ஸ்கள். ஒரு கல்லூரி மாணவன் தொடங்கி ஒரு பெரிய நிறுவனத்தின் சிஇஓ வரை அனைவருக்கும் உதவும் விதவிதமான ஆப்ஸ்கள் குவிந்து கிடக்கின்றன. இதில் நிறுவனங்களின் தலைவர்களாக இருக்கும் சிஇஓக்களுக்கு உதவும் டாப் ஆப்ஸ்களைப் பார்ப்போம். இந்த ஆப்ஸ்கள் நிறுவனங்களின் உயர்பதவியில் இருப்பவர்கள் அனைவருக்கும் கட்டாயமாகத் தேவைப்படும்.
1 ஆபீஸ் ஆப்ஸ்!
பொதுவாக, சிஇஓ போன்ற உயர்பதவி வகிப்பவர்களுக்கு அலுவலக வேலைகளை அலுவலகத்தைவிட்டு வெளியில் உள்ளபோது கவனிக்க வேண்டிய தேவை அதிகம் உள்ளது. அப்படிப்பட்டவர் களுக்கு முதலில் மிகவும் தேவையான ஆப்ஸ் தனது டாக்குமென்ட்டுகளைத் தயார் செய்ய உதவும் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்தான். இது ஐபோன், ஐபேடில் ஆப்பிள் ஆபீஸ் என்ற பெயரில் இருக்கும். இதில் அலுவலகத்தின் ஒரு செய்தி அல்லது தகவல்களைப் பார்க்க உதவும் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் வேர்டு, திட்ட விளக்கங்களுக்கு உதவக்கூடிய பவர் பாயின்ட், அலுவலக கணக்குகளைப் பார்க்கக்கூடிய எக்ஸ்எல் ஆகியவை இடம்பெற்றிருக்கும். இந்த ஆப்ஸ், ஒரு டாக்குமென்ட்டை பார்த்து, படித்து, அதனை மாற்றியமைத்து அதனை நேரடியாக மின்னஞ்சல் அல்லது சமூக வலைதளங்கள் மூலம் மற்றவர்களுக்கு அனுப்பும் விதமாக அமைந்துள்ளது.
ஆப்பிள் போனில் இந்த ஆப்ஸ் இடம்பெற்றிருக்கும். ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இது இலவசமாகக் குறைந்த வசதிகளுடன் தரப்பட்டுள்ளது. அதிக மற்றும் முழுமையான அப்டேட் உள்ள ஆப்ஸ்கள் கட்டண ஆப்ஸாக உள்ளன. சிஇஓக்கள் தங்கள் அலுவலகத் தகவல்களை உடனுக்குடன் அறிய மற்றும் தெரிவிக்க இந்த ஆப்ஸ் எளிமையாக உதவும்.
2 தொலைத்தொடர்பு ஆப்ஸ்கள்!
ஆபீஸுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளத் தொலைத்தொடர்பு ஆப்ஸ்கள் அதிக அளவில் உதவி செய்வதாக இருக்கின்றன. சில முக்கியமான கூட்டங்கள், கருத்தரங்கங்கள் ஆகியவற்றில் சிஇஓக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்பதால், அவர்கள் பங்கேற்க முடியாத நேரங்களில் பெரும்பாலும் அவர்களுக்கு உதவும்விதமாக இருப்பது இந்த ஆப்ஸ்கள்தான். இந்தத் தொலைத்தொடர்பு ஆப்ஸ்களில் மிகவும் உதவிகரமாக இருப்பது ஸ்கைப். இதில் வாய்ஸ்கால், வீடியோகால் மூலம் நிறுவனத்தோடு தொடர்பில் இருக்கலாம். குறைந்த கட்டணத்தில் செல்போன் மற்றும் லேண்ட்லைன் போன்களுக்குத் தொடர்புகொள்ளலாம்.
3ஜி மற்றும் வை-ஃபையில் இயங்கும் ஸ்கைப், கான்ஃப்ரன்ஸ் மற்றும் பயிற்சி வகுப்புகளுக்கு மிகவும் உதவியாக உள்ளது. இந்த ஆப்ஸை சிஇஓக்களின் பயணச் செலவுகளைக் குறைக்கும் உத்தியாகவும் பார்க்கின்றனர். அதுமட்டுமின்றி, நிறுவன பணியாளர்களோடு எப்போதும் தொடர்பில் இருப்பது போன்ற உணர்வையே இது ஏற்படுத்துவதால், இது நிறுவன தலைவர் களுக்கு உதவியாக உள்ள ஆப்ஸ்களின் வரிசை யில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. இதேபோன்ற வசதிகளுடன் வைபர், மேஜிக் ஜாக், ஃபேஸ் டைம் ஆகிய ஆப்ஸ்களும் உள்ளன.
3 நோட் ஆப்ஸ்!
நிறுவனத் தலைவர்கள் சில முக்கியமான மீட்டிங்களுக்குத் தயாராகும்போது அதற்கான குறிப்புகளை உடனே தயார் செய்ய பரிந்துரைக்கப் படும் ஆப்ஸ்கள் மூன்று. அவை, ஒன் நோட், எவர் நோட் மற்றும் லெக்சர் நோட்.
இவை மூன்றும் ஏறக்குறைய ஒரேமாதிரியான செயல்பாடுகளைக் கொண்ட ஆப்ஸ்கள்தான். ஒன் நோட் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆப்ஸ்.  இதில் இயங்க ஒரு மைக்ரோசாஃப்ட் கணக்குத் தேவை. நீங்கள் தயார் செய்யும் குறிப்புகளை இதன் மூலம் மற்றொருவருடன் நேரடியாகப் பகிர  முடியும். இதில் நீங்கள் புகைப்படங்களையும் சேர்க்க முடியும்.
எவர் நோட் ஆப்ஸில் தயாரிக்கப்படும் குறிப்புகள் அனைத்து மொபைல் போன்களிலும் பயன்படுத்தும் அளவுக்கு எளிதாக இருக்கும். இதில் தயாரிக்கப்படும் குறிப்புகள் எளிதாகத் தேடும் அளவுக்கு இதன் தேடுதல் பக்கம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனைப் பிடிஎஃப் பக்கங்களாககூட மாற்றிக்கொள்ளலாம்.
லெக்சர் நோட் ஒருவர் கையால் எழுதுவது போன்ற வடிவத்திலேயே செல்போன் திரையில் எழுதி குறிப்புகளை எடுக்க உதவும் ஆண்ட்ராய்டு ஆப்ஸ் ஆகும். இது கட்டண ஆப்ஸ். இதற்கான மாதிரி பயன்பாட்டு ஆப்ஸ் இலவசமாகக் கிடைக்கிறது.
4 நினைவக ஆப்ஸ்!
பெரும்பாலான சிஇஓக்கள் தங்கள் செல்போனுக்கு வரும் தகவல்களைச் சேமித்து வைக்கவேண்டிய சூழல் இருக்கும். தற்போது செல்போன்கள் அதிக அளவு இன்டர்னல் மெமரியோடு வந்தாலும், மிகப் பெரிய ஃபைல்களைச் சேமித்து வைக்க வசதியாக இல்லை என்பதால் அதற்கு உதவியாகச் சில நினைவக ஆப்ஸ்கள் உள்ளன.
இதில் முக்கியமானது ட்ராப் பாக்ஸ்தான். 2 ஜிபி வரை இலவசமாகச் சேமித்துக் கொள்ளலாம். பிறகு கட்டணம் செலுத்தி, 100 ஜிபி வரை சேமித்து வைத்துக்கொள்ளும் அளவுக்குச் சிறப்பான ஆப்ஸாக உள்ளது. இதில் நீங்கள் சேமித்து வைக்கும் தகவல் களை மற்றவர்களுடன் பகிரும் வசதியும் உள்ளது.
இதேபோன்ற வசதியுடன் இலவசமாகக் கிடைக்கும் சில சிறந்த ஆப்ஸ்களும் உள்ளன. ஒன் ட்ரைவ், கூகுள் ட்ரைவ் ஆகிய ஆப்ஸ்கள் நீங்கள் புதிதாகத் தகவல்களை உருவாக்கி, அதனை யாருடன் பகிர்ந்து கொள்வது, அதனை மாற்றியமைக்க யாருக்கு அனுமதி வழங்குவது என்ற அளவுக்குத் தகவல்களைச் சேமித்து வைக்கும் வசதியுடன் உள்ளன.
ஆப்பிள் போன்களில் ஐ-க்ளவுட் வசதியில் 5 ஜிபி வரை இலவசமாகச் சேமிக்கலாம். பின்னர் தேவைப்படும் மெமரிக்குக் கட்டணம் செலுத்தி அதிகரித்துக் கொள்ளலாம். மாதத்துக்கு 60 ரூபாய் என்ற அளவில் இருந்து கூடுதல் நினைவக வசதிகள் உள்ளன.
5 சமூக வலைதள ஆப்ஸ்கள்!
பெரிய நிறுவனங்களில் தலைவர்களாக இருப்பவர்கள் பொதுவாக அனைவரும் இருக்கும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களைவிட அவர்கள் அதிகம் உலாவுவது லிங்டு இன் போன்ற சமூக வலைதளங்களில்தான். இதில் அவர்கள் மிகவும் புரஃபஷனலாக இயங்க முடியும்.
குறிப்பிட்ட பிரிவில் சிறப்பாகச் செயல்படும் ஒரு நிறுவனத் தலைவரை அந்தப் பிரிவில் ஆர்வம் உள்ள பலரும் தொடர்புகொள்ள முடியும் என்பதால் இந்த ஆப்ஸையே நிறுவனத் தலைவர்கள் அதிகம் விரும்பு கின்றனர். இதில் பிரீமியம் கணக்குகளும் உள்ளன. 10 டாலர் ஆரம்பித்து 60 டாலர் வரை மாத பயன்பாட்டுக்குக் கட்டணமாகக் கொடுத்து பயன்படுத்தும் அளவுக்குக் கட்டணங்கள் உள்ளன.
இதன் அடுத்த வடிவமாக வந்துள்ள லிங்டு இன் கனெக்டெட் ஆப்ஸ் வேகமாகவும், எளிதாகவும் ஒருவருடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளும் விதமாகவும் அமைந்துள்ளது. உங்களுக்குத் தெரிந்த நண்பர்களை அடையாளம் காட்டுவது துவங்கி அவர்களது பிறந்தநாள், விருப்பம் ஆகியவற்றைத் தெரிவிக்கும் அளவுக்கு மேம்பாடு அடைந்ததாக உள்ளது இந்த ஆப்ஸ்.

 நன்றி
விகடன்

Saturday, May 16, 2015

ஆன்ட்ராய்டு ஆப்ஸ்; இனி கம்ப்யூட்டர்களிலும் இயக்கலாம்!

உலக அளவில் 80 சதவீத ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் கூகுளின் பிரபல ஆன்ட்ராய்டு ஓ.எஸ். தனது ஆப்ஸ்களை கம்ப்யூட்டர்களிலும் இயக்கும் வகையில் விரைவில் வெளியிட உள்ளது. கூகுள் நீண்ட நாள் கனவுத்திட்டமாக ஏ.ஆர்.சி. (App Runtime for Chrome (ARC)) பிராஜெக்ட்டை முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆன்ட்ராய்டு ஆப்ஸ்களை எல்லா கருவிகளிலும் இயங்க வைக்கும் திட்டத்தில் களமிறங்கியுள்ளது.

இந்த ஏ.ஆர்.சி பிராஜெக்ட் வந்தால் செயல்பாட்டுக்கு வந்தால் குரோம் பிரவுஸர்கள் இன்ஸ்டால் செய்திருந்தால் போதும் விண்டோஸ், லினக்ஸ், மேக் மற்றும் குரோம் உள்ளிட்ட எல்லா டெஸ்க்டாப் ஓ.எஸ்-களிலும் ஆன்ட்ராய்டு ஆப்ஸ்கள் இயங்கும். ஆன்ராய்டு ஆப்ஸ்களுக்கு என்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஏ.ஆர்.சி குரோம் ஓ.எஸ்ஸில் இயங்கவே கொண்டு வரப்பட்டது. ஆனால், இப்போது அனைத்து ஓ.எஸ்.களிலும் இயங்கும் வகையில் வெளிவரவுள்ளது. ஆன்ராய்டுக்கு அதிக ஆப்ஸ்களை வடிவமைக்க புரோகிராம் டெவலப்பர்களும் இந்த ஏ.ஆர்.சி. பிராஜெக்ட் பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
கேட்ஜெட்: மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க்!(Micromax Canvas Spark)
மீபகாலமாக பட்ஜெட் ஸ்மார்ட் போன்களின் மார்க்கெட் அதிகரித்துள்ளது. மோட்டோரோலா, லெனோவா, ஷியோமி போன்ற பெரிய பிராண்ட்களின் போட்டியும் இந்த பட்ஜெட் ஸ்மார்ட் போன் மார்க்கெட்டில் அடங்கும். அந்த வகையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட் போனான மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க் ஸ்மார்ட் போனை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
டிசைன்:
இது பட்ஜெட் ஸ்மார்ட் போனாக இருந்தாலும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் டிசைனுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இந்த போன் ‘பிரீமியம்’ டிசைனைக் கொண்டு உள்ளது. இந்த போன் இரண்டு மாடல்களில் வருகிறது. ஒன்று White/Gold கலர் காம்பினேஷன். மற்றொன்று Grey/Silver கலர் காம்பினேஷன். இந்த ஸ்மார்ட் போனின் அடர்த்தி 8.5mm மற்றும் எடை 134 கிராம்.
டிஸ்ப்ளே:
4.7 இன்ச் IPS 16M 540x960 டிஸ்ப்ளேவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போனில் ‘Ambient Light’ சென்ஸாரும் அடங்கும். இந்த சென்ஸார் வெளிச்சத்துக்கு ஏற்ப ஸ்க்ரீனின் பிரகாசத்தை மாற்றி அமைக்கும் தன்மையைப் பெற்றுள்ளது. பொதுவாக, அதிக விலை ஸ்மார்ட் போனில் இடம்பெறும் இந்த சென்ஸார், ஒரு பட்ஜெட் ஸ்மார்ட் போனில் கிடைப்பது சிறப்பம்சம்தான். மேலும், இந்த டிஸ்ப்ளே பாதுகாப்புக்காக ‘Corning Gorilla Glass 3’யைப் பெற்றுள்ளது.
தொழில்நுட்பம்:
இந்த ஸ்மார்ட் போன் MediaTek MT6582 SoC பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது. இந்த 1.3GHz Quad-core பிராசஸருடன் 1GB ரேமும் இந்த ஸ்மார்ட் போனில் அடங்கும். Mali 400 என்ற பிரத்யேக கிராபிக்ஸ் பிராசஸரும் அடங்கும். 8GB இன்டர்னல் மெமரியை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போனின் மெமரியை 32GB வரை SD கார்டு மூலம் விரிவுப்படுத்திக் கொள்ளலாம்.
கேமரா:
இந்த ஸ்மார்ட் போன் 8MP பின்புற கேமராவை கொண்டுள்ளது. பிளாஷ் வசதியும் அடங்கும். மேலும், 2MP முன்புற கேமரா செல்ஃபி எடுக்க போதுமானதாக இருக்கிறது.
இயங்குதளம்:
இந்த ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வெர்ஷனான ஆண்ட்ராய்ட் Lollipop இயங்குதளத்தைக் கொண்டு இயங்குகிறது. High-end ஸ்மார்ட் போன்களுக்கே இந்த இயங்குதளம் கிடைக்காத நிலையில், இந்த பட்ஜெட் ஸ்மார்ட் போனுக்குக் கிடைப்பது சிறப்பம்சம்தான்.
பேட்டரி:
இந்த ஸ்மார்ட் போன் 2000 mAh பேட்டரியைக் கொண்டு இயங்குகிறது. சுமார் ஏழு மணி நேரம் வரை இந்த பேட்டரி செயல்படும் என்று எதிர்ப்பார்க்கலாம்.
இந்த ஸ்மார்ட் போனின் இந்திய விலை ரூபாய் 5,000.

 நன்றி...

Friday, May 15, 2015

ஆப்ஸ்... அள்ளித் தரும் பிசினஸ் வாய்ப்புகள்!




டந்த 15 ஆண்டுகளாக வெப்சைட்டுகளே நமக்குப் பெருந்துணையாக இருந்தது. பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு, சினிமா டிக்கெட் முன்பதிவு என சகலத்தையும் வெப்சைட்டுகள் மூலம் எளிதாக எல்லோராலும் செய்ய முடிந்தது. முக்கியமாக, இ-காமர்ஸ் துறையானது இந்த வெப்சைட்டுகள் மூலம் மிகப் பெரிதாக வளர்ந்தன. ஆனால், இன்றைக்கு வெப்சைட்டுகள் மெள்ள மெள்ள மறைந்து, இனி எல்லாமே ஆப்ஸ்மயம் என்று சொல்கிற அளவுக்கு நிலைமை மாறி வருகிறது. வெப்சைட்டுகளே தங்களின் வேலையை ஸ்மார்ட்டாக செய்ததென்றால், ஆப்ஸ்கள் அதைவிட ஸ்மார்ட்டாக வேலையைச் செய்து, நமது தேவைகளை சீக்கிரமாகவே பூர்த்தி செய்தன.
இன்றைக்கு சிறியது முதல் பெரியது வரையிலான பல தொழில் நிறுவனங்கள் ஆப்ஸ் மூலம் தங்கள் பிசினஸை பன்மடங்காக பெருக்கி இருக்கின்றன. இத்தனை நாளும் பயன்படுத்தி வந்த வெப்சைட்டுகளை ஓரங்கட்டி விட்டு, ஆப்ஸ்கள் மூலம் பிசினஸை அள்ளி வருகின்றன.
இந்த ஆப்ஸ்களை எப்படி உருவாக்குவது, எந்த மாதிரியான தொழில்களை ஆப்ஸ் மூலம் செய்யலாம், ஆப்ஸ்களை உருவாக்க என்ன செலவாகும், வாடிக்கையாளர்களுக்கு ஆப்ஸ் மூலம் சேவைகளை எப்படித் தொடர்ந்து வழங்குவது போன்ற பல கேள்விகளுடன் ஸ்மார்ட் போன்களுக்கான ஆப்ஸ்களை உருவாக்கும் ஆப்ளிகேஷன் டெவலப்பர்கள் (Mobile    Application Developer) சிலரிடம் பேசினோம்.
 ஆப்ஸ்களும், வாடிக்கையாளர்களும்!
நாம் முதலில் சந்தித்து பேசியது இம்பைகர் டெக்னாலஜீஸ் (Impiger Technologies) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஓஓ  வி.ராமகிருஷ்ண மூர்த்தியை.
“ஒரு தொழில் உங்களுக்கு நன்றாக செய்யத் தெரிகிறது. அந்தத் தொழிலை இன்னும் பல லட்சம் பேருக்கு சென்றடைகிற மாதிரி வளர்த்தெடுக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு ஆப்ஸ் நிச்சயம் அவசியம். ஏற்கெனவே தொழில்களை செய்துவரும் தொழில்   முனைவோர்கள், புதிதாகத் தொழில் தொடங்குவோர்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்காக இனி தங்களுக்கென ஒரு ஆப்ஸ் கட்டாயம் தேவை என்பதை உணரவேண்டும்.
இதை நான் சொல்லக் காரணமே, இன்றைக்கு பலரும் எங்களைத் தேடி வந்து ஆப்ஸ்களை உருவாக்கித் தரும்படி கேட்பதினால்தான். போட்டி நிறைந்த இந்த உலகில் நீங்கள் முதலில் ஆப்ஸ்களை பயன்படுத்தத் தொடங்கினீர்கள் எனில், பிசினஸில் நீங்கள் நிச்சயம் ஜெயிப்பீர்கள்’’ என்றவர், ஆப்ஸ்கள் உருவாக்குவது குறித்தும் தெளிவாக எடுத்துச் சொன்னார்.
 ஆப்ஸ்களை உருவாக்குங்கள்!
‘‘ஒரு நிறுவனம் அனைத்து வசதிகளுடன் ஆப்ஸ்களை உருவாக்க நினைத்தால், குறைந்தபட்சம் 2.5 லட்சம் ரூபாய் செலவாகும். இதற்கும் குறைவான செலவில்கூட ஆப்ஸ்களை உருவாக்க முடியும். ஆனால், அதன் தரமும், எளிமையும் குறைந்தே இருக்கும். இன்றைய நிலையில் ஆப்ஸ்களை உருவாக்கித் தருபவர்கள்  ஏராளமானவர்கள் இருக்கி றார்கள். அவர்களில் நம்பகமான வர்களை அணுகி, ஆப்ஸ்களை உருவாக்கிக் கொள்ளலாம்.
ஆப்ஸ்களை உருவாக்கி விட்டோம், அதன்பிறகு என்ன செய்வது, இதை எப்படி மார்க்கெட்டிங் செய்வது என்பதே உங்களின் கேள்வியாக இருக்கும். யார் உங்களுக்கு ஆப்ஸை உருவாகித் தருகிறார் களோ, அவர்களைக் கொண்டே ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ், பிளாக்பெர்ரி போன்ற ஆப்ஸ் ஸ்டோர்களில் ஆப்ஸை லோடு செய்துவிட முடியும். அனைத்து ஆப்ஸ் ஸ்டோர்களிலும் இயங்கும் விதமாகவும், அனைத்துவிதமான மொபைல் டிவைஸ்களில் செயல் படுவது மாதிரியும் ஆப்ஸ்களை உருவாக்க வேண்டுமென்றால் அதற்கான நேரமும், செலவுகளும் அதிகரிக்கும். அனைத்துவிதமான செயல்பாடுடன் கூடிய ஆப்ஸ் களை உருவாக்க குறைந்தபட்சம் இரண்டு வாரம் முதல் அதிக பட்சம் எட்டு மாதம் வரை ஆகலாம்.
ஆப்ஸ் ஸ்டோரில் ஆப்ஸ்களை லோடு செய்வதில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று, நீங்களாகவே தனியாக கணக்குத்  திறந்து, அதன் வாயிலாக ஆப்ஸ் ஸ்டோர்களில் தங்களுடைய ஆப்ஸை லோடு செய்வது. இன்னொன்று, ஆப்ஸ்களை உருவாக்கித் தந்த நிறுவனத்தாரின் ஆப்ஸ் ஸ்டோர் கணக்கு மூலம் லோடு செய்வது.
இந்த இரண்டுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், நீண்ட நாள் நோக்கில் ஆப்ஸ் ஸ்டோரில் தங்களின் பிராண்டை உருவாக்க நினைப்பவர்கள் தனியாக கணக்குத் தொடங்கி லோடு செய்வதே நல்லது.
 இதன் மூலம் உங்கள் ஆப்ஸ்களை எத்தனை பேர் டவுண்லோடு செய்தார்கள்,  எந்த வயதைச் சேர்ந்தவர்கள் தங்களின் ஆப்ஸ்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பது  போன்ற விவரங்களை ஆப்ஸ் ஸ்டோர் அனலெட்டிக்ஸ் மூலம்  தெரிந்துகொள்ள முடியும்.
 எல்லாத் தொழில்களுக்கும் ஆப்ஸ்!
இன்றைய நிலையில் ஹெல்த்கேர் சார்ந்த தொழில் களைச் செய்வோர், வீட்டுக்குத் தேவையான சேவைகளை வழங்குவோர்களின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இவர்கள் தங்களுக்கான ஆப்ஸ்களை உருவாக்கி அதன் மூலம் தங்களின் வருமானத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
அதேபோல, இன்டீரியர் டிசைன் தொழில்களையும் ஆப்ஸ் மூலம் செய்ய முடியும். உதாரணத்துக்கு, இன்டீரியர் டிசைன் தொழிலில் இருப்பவர்கள் தங்களுக்கான ஆப்ஸில் டிசைன்களுக்கான படங்கள், ஏற்கெனவே செய்திருக்கும் வீட்டின் இன்டீரியர் படங்கள் மற்றும் இன்டீரியர் டிசைன் சார்ந்த விவரங்கள் என அனைத்தையும் ஆப்ஸ் மூலம் வாடிக்கையாளர் களுக்கு வழங்கலாம். இதைப் பயன்படுத்தும்போது நேரில் சென்று டிசைன்களைப் பார்க்க வேண்டிய நேரம்  வாடிக்கை யாளர்களுக்கு மிச்சமாகும்.
தவிர, இந்த சேவைகளை ஆப்ஸ் மூலம் தரும்போது எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டு மானாலும் பார்த்து ஆர்டர்களைத் தரமுடியும் என்பதால், கிடைக்கக்கூடிய ஆர்டர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.
 ஆப்ஸ்களை மார்க்கெட்டிங் செய்யுங்கள்!
ஆப்ஸ்களை உருவாக்கி அதை ஆப்ஸ் ஸ்டோர்களில் லோடு செய்தபிறகு, முதலில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி ஆப்ஸ்களை மார்க்கெட்டிங் செய்ய வேண்டும்.
ஏனெனில், சமூக வலைதளங்களே மார்க்கெட்டிங் செய்வதற்கான ஆதார சக்தியாக விளங்குகிறது. அதன்பிறகு தங்களுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்களிடம் சொல்லி ஆப்ஸை டவுண்லோடு செய்து பயன்படுத்தி, அது குறித்த கருத்தை ஆப்ஸ் ஸ்டோரில் பதிவு செய்யச் சொல்லலாம்.
டவுண்லோடு எண்ணிக்கை, பயன்பாடு, ஆப்ஸ் பற்றிய கருத்து ஆகியவை அதிகரித்துக் காணப்படும்போது, அந்த ஆப்ஸ்தான் ஆப்ஸ் ஸ்டோரில் லோடு செய்திருக்கும் ஆப்ஸ்களிலேயே முன்னிலையில் இருக்கும்.
ஆன்லைன், தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் என ஆப்ஸ் குறித்த விளம்பரங்களை எதில் வேண்டுமானாலும் செய்யலாம். இனி எல்லாம் ஆப்ஸ்தான் என்கிறபோது தொலைக் காட்சியில் வரும் பெரும்பாலான விளம்பரங்கள் இனி அந்தந்த நிறுவனங்களின் ஆப்ஸ் குறித்த தாக இருந்தாலும் ஆச்சரியப்படு வதற்கில்லை” என்றார் தெளிவாக.
 இன் ஆப்ஸ் பர்சேஸ்!
ஆப்ஸை உருவாகும்போது ‘இன் ஆப்ஸ் பர்ச்சேஸ்’ கான்செப்ட்டை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதாவது, ஒரு ஆப்ஸை அப்கிரேடு செய்யும்போது, மேலும் சில கட்டணத்துடன் கூடிய சேவைகளைத் தங்களின் வாடிக்கையாளர்களுக்குத் தர நினைத்தால், அதற்கான வருமானத்தை ‘இன் ஆப்ஸ் பர்ச்சேஸ்’ மூலம் பெறமுடியும்.
உதாரணத்துக்கு, ஃபிட்னஸ் நிலையத்தின் ஆப்ஸை அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருப்பதாகக் கொள்வோம். அதை அப்கிரேடு செய்யும்போது, உடற்பயிற்சி குறித்தும், உணவுமுறைகள் குறித்தும் டிப்ஸ் வழங்க நினைக்கிறார்கள். இதற்கு மாதம் 100 ரூபாய் கட்டணத்தைப் பெற இருப்பதாகக் கொள்வோம்.
இதை அப்கிரேடு செய்யும்போது வாடிக்கையாளர்களுக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் தெரியப்படுத்தலாம். அவர்கள் அந்த சேவையைப் பயன்படுத்த நினைக்கும்பட்சத்தில் ஆப்ஸ் ஸ்டோர் வழியாகக் கட்டணத்தைச் செலுத்தலாம். இதற்கு முன்னமே உருவாக்கி இருக்கும் ஆப்ஸில் ‘இன் ஆப்ஸ் பர்ச்சேஸ்’ வசதி இருக்க வேண்டும்” என்றார்.
 விசிட்டிங் கார்டுகளில் ஆப்ஸ்கள்!
அடுத்ததாக, ஆப்ஸ் மூலமாகச் செய்யும் பிசினஸ் குறித்தும், அது சார்ந்த டெக்னிக்கல் விஷயங்கள் பற்றியும் அம்ரிதா பி ஆன்லைன் (Amrithaa Be online) நிறுவனத்தின் சிஇஓ, வி.ஜி.சுப்ரமணியனிடம் பேசினோம்.
‘‘ஒருவருடைய தொழில் ரீதியான, வேலைரீதியான விவரங்களை உள்ளடக்கிய விசிட்டிங் கார்டில், கம்பெனியின் பெயர், செல்போன் நம்பர், இ-மெயில் முகவரி என பல முக்கிய விஷயங்கள் இருக்கும். ஆனால், இனிவரும் விசிட்டிங் கார்டுகளில் நிறுவனங்களின் ஆப்ஸ் குறியீடும் தவறாமல் இடம்பெறும் காலம் தொலைவில் இல்லை.
காரணம், இன்றைய நிலையில் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர் களில் பெரும்பாலானவர்கள் ஆப்ஸ் மூலமாகத்தான் தங்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்து வருகிறார்கள். இன்றைய நிலையில் இருக்கும் 2ஜி, 3ஜி இணையதள சர்வீஸ்களிலேயே பல லட்சம் ஆப்ஸ்கள் அதிவேக மாக இயங்கி வருகின்றன.
அடுத்து 4ஜி அலைகற்றைச் சேவை நடைமுறைக்கு வரும்பட்சத்தில் ஆப்ஸ்களின் பயன்பாடு இன்னும் கூடுதல் வேகம் பெறும்.
இன்றைய நிலையில் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்பவர் கள், தங்கள் நிறுவனத்தின் பெயரில் ஆப்ஸை உருவாக்கி, அதை வாடிக்கையாளர்களிடம் அறிமுகப்படுத்துவதன் மூலம் லாபத்தை பலமடங்கு அதிகப் படுத்தலாம்.
ஆப்ஸ் மூலம்  ரியல் எஸ்டேட் பிசினஸை அறிமுகப் படுத்தும்போது வாடிக்கையாளர் களுக்கு நம்பிக்கை பெருகும். இடம், விற்பனைக்கு இருக்கும் வீடுகளின் புகைப்படங்களை ஆப்ஸ்களில் பதிவிட்டு வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும் அந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். வீடு அமைந்துள்ள இடம், அருகில் இருக்கும் வசதி வாய்ப்புகள் குறித்த வரைபடங்களை ஆப்ஸினுள் அமைத்திருந்தால் கூடுதல் சிறப்பு” என்றவர், ஆப்ஸின் வகைகளை விளக்கினார்.
இரண்டு வகை ஆப்ஸ்கள்!
ஆப்ஸை பொறுத்தவரை, நேட்டிவ் ஆப்ளிகேஷன் (Native application) மற்றும் கிராஸ் பிளாட்ஃபார்ம் ஆப்ளிகேஷன் (Cross platform application) என இரண்டு வகை இருக்கின்றன. நேட்டிவ் ஆப்ளிகேஷன் என்பது ஒவ்வொரு ஆப்ஸ் ஸ்டோருக்கும் தனியாக ஆப்ஸை உருவாக்கும் முறையாகும். ஆனால், கிராஸ் பிளாட்ஃபார்ம் ஆப்ளிகேஷன் என்பது, ஒரு ஆப்ஸை உருவாக்கி அதை அனைத்து ஆப்ஸ் ஸ்டோர்களுக்கும் ஏற்றார்போல மாற்றிக்கொள்ளும் வசதி.
அதேபோல, இன்டர்நெட் உதவியில்லாமல் இயங்கக்கூடிய ஆப்ஸ் (இந்த ஆப்ஸ்களை டவுண்லோடு செய்ய மட்டும் இன்டர்நெட் வசதி தேவைப் படும்), இன்டர்நெட் உதவியுடன் இயங்கும் ஆப்ஸ் என இரண்டு வகைகளில் ஆப்ஸ்களை உருவாக்க முடியும். இதில் இன்டர்நெட் வசதி இல்லாத ஆப்ஸ்கள் பெரும்பாலும் கேம்ஸ் போன்ற பொழுதுபோக்கு ஆப்ஸ்களாகவே இருக்கும்.
வேலைக்கான கன்சல்டன்ஸி நிறுவனங்களை அமைப்பவர்கள், டுடோரியல் கல்வி நிறுவங்கள், டியூசன் சென்டர்கள், கோச்சிங் சென்டர்களை அமைப்பவர்கள் தங்களுக்கான ஆப்ஸ்களை உருவாக்கி, அதன் மூலம் தங்களின் மாணவர்களுக்குப் பயிற்சிகளை வழங்க முடியும். மாணவர்களை ஒருங்கிணைத்து ஆப்ஸ் மூலம் எளிமையான தேர்வுகளைக்கூட நடத்தும் படியாக ஆப்ஸ்களை உருவாக்கிக் கொள்ளலாம். அதன் மூலம் அவர்களுக்கு பாடம் நடத்துவது, குறிப்புகளை வழங்குவது போன்ற அனைத்து விஷயங்களையும் செய்ய முடியும்.
ஆப்ஸ் மூலம் ரீடெய்ல் பிசினஸ் செய்பவர்கள், ஆர்டர் செய்திருக்கும் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விரைவில் சேர்க்க தேவையான போக்குவரத்து விஷயங்களில் வேகமாக இருக்க வேண்டியது அவசியமாகும்” என்றார்.
எதிர்கால வர்த்தகம் ஆன்லைனைத்தான் நம்பி இருக்கிறது என்பதை சரியாக புரிந்துகொண்டவர்கள், இனியும் தாமதிக்காமல் ஆப்ஸ் மூலம் தங்கள் வாடிக்கையாளர்களை சென்று சேருவதற்குத் தேவை யான ஆப்ஸ்களை உருவாக்கிக் கொள்வதே சரி. இந்த ஆப்ஸ் மூலம் மட்டுமே இன்னும் அதிகமான வாடிக்கையாளர் களை பெற முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.


ஆப்ஸ் உருவாக்கும்போது..!
* ஆப்ஸ்கள் எளிமையாக கையாளக்கூடியதாகவும், வேகமாக டவுண்லோடு ஆகும்படியாகவும் இருக்க வேண்டும்.
* ஆப்ஸின் அளவு குறைவானதாக இருக்க வேண்டியது அவசியம்.
* அனைத்துவிதமான மொபைல்களில் இயங்கும் விதமாக ஆப்ஸ்களின் வடிவமைப்பு இருக்க வேண்டும்.
* ஆப்ஸ்கள் மூலம் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் படியாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு அழகு நிலையம் தொடர்பான ஆப்ஸ் எனில், அதில் அந்த அழகு நிலையம் அமைந்திருக்கும் இடம், முகவரி, அலைபேசி/தொலைபேசி எண்கள், ரூட்மேப் போன்ற அனைத்தும் அமைந்திருக்க வேண்டும். செல்ஃப் சர்வீஸ் வழங்கும் ஆப்ஷன்கள் ஆப்ஸில் இருக்கும்போது, வாடிக்கை யாளர்கள் நம்மைத் தொடர்பு கொண்டு பேசுவதாக இல்லாமல், அவர்கள் அந்த ஆப்ஸை கிளிக் செய்ததும் அருகில் இருக்கும் அழகு நிலையத்திலிருந்து வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்வதாக இருக்க வேண்டும். மேலும் முக அழகு, உடல் அழகு மற்றும் முடி அழகு தொடர்பான டிப்ஸ்களையும் அந்த ஆப்ஸினுள் தந்திருந்தால் கூடுதல் சிறப்பு.
* ஆப்ஸ்களை உருவாக்கும்போது, ஆப்ஸ் மூலம் பிசினஸ் வளர்ச்சியை எதிர்பார்ப்பதுபோல, அந்த ஆப்ஸினால் வருமானம் ஈட்டுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. நமது ஆப்ஸில் விளம்பரங்களை அனுமதிப்பதன் மூலமும், கட்டணத்துக்குரிய ஆப்ஸாக உருவாக்குவதன் மூலமும் நம்மால் வருமானத்தை ஈட்ட முடியும்.

‘‘ஒரே ஆண்டில்  மூன்று மடங்கு வளர்ந்திருக்கிறோம்!’’
கணேஷ் வாசுதேவன், சிஇஓ, IndiaProperty.com
“கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் India Property Real Estate App என்கிற பெயரில் ஒரு ஆப்ஸை வாடிக்கையாளர்களுக்காக வெளியிட்டோம். இன்று ஒரு லட்சம் பேர் இந்த ஆப்ஸை டவுண்லோடு செய்து பயன்படுத்தி வருகிறார்கள். வீடுகள், வீட்டுமனைகள், அலுவலகங்கள் ஆகியவற்றை வாங்க நினைப்பவர்களுக்கான ஆப்ஸ் இது. இன்றைய நிலையில் எங்களது மொத்த வாடிக்கையாளர்களில் 35-45% வாடிக்கையாளர்கள் இந்த ஆப்ஸை பயன்படுத்துகிறார்கள். கடந்த 12 மாதங்களில் மட்டும் ஆப்ஸை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.’’

‘‘ஆப்ஸ் மூலம் அதிக வருமானம் கிடைக்கிறது!’’
சாய் சித்ரா, சிபிஎம்ஓ, Baratmatrimony.com
“மொபைல் போன்களில் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் அதிகம் என்பதால் அவர்களுக்கு எளிமையாகப் பயன்படுத்தும் வகையில் Bharat Matrimony என்கிற பெயரிலேயே ஆப்ஸ் ஒன்றை 2012-ல் வெளியிட்டோம். தற்போது எங்களது வாடிக்கையாளர்களில் 60% பேர் இந்த ஆப்ஸையும், 40% பேர் வலைதளத்தையும் பயன்படுத்தி வருகிறார்கள். எங்களது நிறுவனத்துக்கு வலைதளம் மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட ஆப்ஸ் மூலம் கிடைக்கும் வருமானமே அதிகம். வலைதளத்தைப் பயன்படுத்துவதைவிட ஆப்ஸை பயன்படுத்துவது எளிமையாகவும், நேரத்தை மிச்சப்படுத்துவதாகவும் இருப்பதாகச் சொல்கிறார்கள் எங்கள் வாடிக்கையாளர்கள்.’’

நன்றி...
 

புதிய ஸ்மார்ட் போன் கவனிக்க வேண்டியவை

ஒவ்வொரு வாரமும் பல விதங்களில் புதிய தொழில்நுட்பங்களோடு அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட்போன்கள் வெளியாகின்றன. சந்தையில் நிலவும் போட்டி காரணமாக பல நிறுவனங்களும் புதிய சலுகைகளை வழங்குவது அந்நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்கின்றது என்றும் கூறலாம். சந்தையில் புதிய ஸ்மார்ட்போன் வெளியானால் உடனே அதனை வாங்குபவரா நீங்கள், அப்படியானால் இந்தத் தொகுப்பு உங்களுக்கானது தான்.

பட்ஜெட்:
வாங்க இருக்கும் ஸ்மார்ட்போனிற்கு எவ்வளவு செலவு செய்ய இருக்கின்றீர்கள் என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும்.
 
அப்டேட் 
பட்ஜெட்டிற்கு ஏற்ற பிரான்டு மற்றும் மாடல்களை பரிசீலனை செய்யலாம்.
 
ஸ்கிரீன் 
ஸ்மார்ட்போன் எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்.
 
போன் 
புதிய போன் ஆன்டிராய்டு அல்லது ஐபோன் வாங்குவதா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
 
இயங்குதளம் 
இதனை முடிவு செய்யும் முன் எது உங்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
 
பயன்பாடு 
 உங்களது பயன்பாட்டிற்கு ஏற்ப சிறந்த மாடலை தேர்வு செய்யலாம்.

சலுகை 
சிறந்த சலுகைகளை பெற இணையதளம் தான் இன்று சிறந்ததாக இருக்கின்றது.
 
அழைப்பு 
கான்ஃபெரன்ஸ் கால் அதிகம் செய்ய வேண்டுமானால் சாம்சங் கேலக்ஸி எஸ் மற்றும் நோட் போன்கள் சிறந்ததாக இருக்கும்.

பேட்டரி 
உங்களது பயன்பாட்டிற்கு ஏற்ப அதிக பேட்டரி இருக்கும் போன்களை தேர்வு செய்யலாம்.


பூகம்பம் உணர புதிய 'ஆப்ஸ்'!

ஸ்மார்ட்போன் இருந்தா போதும்: ஜி.பி.எஸ். உள்ள ஸ்மார்ட்போன்கள் நிலநடுக்கம் ஏற்படுவதை சிறிது நேரத்திற்கு முன்பாகவே உணரும் தன்மையை பெற்றியிருப்பதாக அமெரிக்காவை தளமாக கொண்டு செயல்படும் அறிவியல் இதழில் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளார்கள்.

தீவிரமான நிலநடுக்க எச்சரிக்கை: ஆனால் சிறிய அளவிலான நிலநடுக்கத்தை ஜி.பி.எஸ். ஸ்மார்ட்போன்களால் உணரமுடியாது. அதேசமயம் மிதமான மற்றும் தீவிரமான நிலநடுக்கத்தை அவற்றால் முன்னதாகவே உணர்ந்து எச்சரிக்கை செய்யமுடியும்.

புதிய அப்ளிகேஷன் உருவாக்கம்: இதற்கான புதிய ஆப் உருவாக்கி, அது வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு வந்தால் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் அதிகமாக பாதிக்கப்படும் பல நாடுகளுக்கு பெரிய உதவியாக இருக்கும்.

இனி உயிரிழப்புகள் வேண்டாம்: மேலும் நிலநடுக்கத்தால் ஏற்படும் உயிர் இழப்புகளையும் தவிர்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளார்கள்.