கடந்த 15 ஆண்டுகளாக வெப்சைட்டுகளே நமக்குப் பெருந்துணையாக இருந்தது. பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு, சினிமா டிக்கெட் முன்பதிவு என சகலத்தையும் வெப்சைட்டுகள் மூலம் எளிதாக எல்லோராலும் செய்ய முடிந்தது. முக்கியமாக, இ-காமர்ஸ் துறையானது இந்த வெப்சைட்டுகள் மூலம் மிகப் பெரிதாக வளர்ந்தன. ஆனால், இன்றைக்கு வெப்சைட்டுகள் மெள்ள மெள்ள மறைந்து, இனி எல்லாமே ஆப்ஸ்மயம் என்று சொல்கிற அளவுக்கு நிலைமை மாறி வருகிறது. வெப்சைட்டுகளே தங்களின் வேலையை ஸ்மார்ட்டாக செய்ததென்றால், ஆப்ஸ்கள் அதைவிட ஸ்மார்ட்டாக வேலையைச் செய்து, நமது தேவைகளை சீக்கிரமாகவே பூர்த்தி செய்தன.
இந்த ஆப்ஸ்களை எப்படி உருவாக்குவது, எந்த மாதிரியான தொழில்களை ஆப்ஸ் மூலம் செய்யலாம், ஆப்ஸ்களை உருவாக்க என்ன செலவாகும், வாடிக்கையாளர்களுக்கு ஆப்ஸ் மூலம் சேவைகளை எப்படித் தொடர்ந்து வழங்குவது போன்ற பல கேள்விகளுடன் ஸ்மார்ட் போன்களுக்கான ஆப்ஸ்களை உருவாக்கும் ஆப்ளிகேஷன் டெவலப்பர்கள் (Mobile Application Developer) சிலரிடம் பேசினோம்.
ஆப்ஸ்களும், வாடிக்கையாளர்களும்!
நாம் முதலில் சந்தித்து பேசியது இம்பைகர் டெக்னாலஜீஸ் (Impiger Technologies) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஓஓ வி.ராமகிருஷ்ண மூர்த்தியை.
இதை நான் சொல்லக் காரணமே, இன்றைக்கு பலரும் எங்களைத் தேடி வந்து ஆப்ஸ்களை உருவாக்கித் தரும்படி கேட்பதினால்தான். போட்டி நிறைந்த இந்த உலகில் நீங்கள் முதலில் ஆப்ஸ்களை பயன்படுத்தத் தொடங்கினீர்கள் எனில், பிசினஸில் நீங்கள் நிச்சயம் ஜெயிப்பீர்கள்’’ என்றவர், ஆப்ஸ்கள் உருவாக்குவது குறித்தும் தெளிவாக எடுத்துச் சொன்னார்.
ஆப்ஸ்களை உருவாக்குங்கள்!
‘‘ஒரு நிறுவனம் அனைத்து வசதிகளுடன் ஆப்ஸ்களை உருவாக்க நினைத்தால், குறைந்தபட்சம் 2.5 லட்சம் ரூபாய் செலவாகும். இதற்கும் குறைவான செலவில்கூட ஆப்ஸ்களை உருவாக்க முடியும். ஆனால், அதன் தரமும், எளிமையும் குறைந்தே இருக்கும். இன்றைய நிலையில் ஆப்ஸ்களை உருவாக்கித் தருபவர்கள் ஏராளமானவர்கள் இருக்கி றார்கள். அவர்களில் நம்பகமான வர்களை அணுகி, ஆப்ஸ்களை உருவாக்கிக் கொள்ளலாம்.
ஆப்ஸ் ஸ்டோரில் ஆப்ஸ்களை லோடு செய்வதில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று, நீங்களாகவே தனியாக கணக்குத் திறந்து, அதன் வாயிலாக ஆப்ஸ் ஸ்டோர்களில் தங்களுடைய ஆப்ஸை லோடு செய்வது. இன்னொன்று, ஆப்ஸ்களை உருவாக்கித் தந்த நிறுவனத்தாரின் ஆப்ஸ் ஸ்டோர் கணக்கு மூலம் லோடு செய்வது.
இதன் மூலம் உங்கள் ஆப்ஸ்களை எத்தனை பேர் டவுண்லோடு செய்தார்கள், எந்த வயதைச் சேர்ந்தவர்கள் தங்களின் ஆப்ஸ்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பது போன்ற விவரங்களை ஆப்ஸ் ஸ்டோர் அனலெட்டிக்ஸ் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
எல்லாத் தொழில்களுக்கும் ஆப்ஸ்!
இன்றைய நிலையில் ஹெல்த்கேர் சார்ந்த தொழில் களைச் செய்வோர், வீட்டுக்குத் தேவையான சேவைகளை வழங்குவோர்களின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இவர்கள் தங்களுக்கான ஆப்ஸ்களை உருவாக்கி அதன் மூலம் தங்களின் வருமானத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
அதேபோல, இன்டீரியர் டிசைன் தொழில்களையும் ஆப்ஸ் மூலம் செய்ய முடியும். உதாரணத்துக்கு, இன்டீரியர் டிசைன் தொழிலில் இருப்பவர்கள் தங்களுக்கான ஆப்ஸில் டிசைன்களுக்கான படங்கள், ஏற்கெனவே செய்திருக்கும் வீட்டின் இன்டீரியர் படங்கள் மற்றும் இன்டீரியர் டிசைன் சார்ந்த விவரங்கள் என அனைத்தையும் ஆப்ஸ் மூலம் வாடிக்கையாளர் களுக்கு வழங்கலாம். இதைப் பயன்படுத்தும்போது நேரில் சென்று டிசைன்களைப் பார்க்க வேண்டிய நேரம் வாடிக்கை யாளர்களுக்கு மிச்சமாகும்.
தவிர, இந்த சேவைகளை ஆப்ஸ் மூலம் தரும்போது எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டு மானாலும் பார்த்து ஆர்டர்களைத் தரமுடியும் என்பதால், கிடைக்கக்கூடிய ஆர்டர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.
ஆப்ஸ்களை மார்க்கெட்டிங் செய்யுங்கள்!
ஆப்ஸ்களை உருவாக்கி அதை ஆப்ஸ் ஸ்டோர்களில் லோடு செய்தபிறகு, முதலில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி ஆப்ஸ்களை மார்க்கெட்டிங் செய்ய வேண்டும்.
ஏனெனில், சமூக வலைதளங்களே மார்க்கெட்டிங் செய்வதற்கான ஆதார சக்தியாக விளங்குகிறது. அதன்பிறகு தங்களுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்களிடம் சொல்லி ஆப்ஸை டவுண்லோடு செய்து பயன்படுத்தி, அது குறித்த கருத்தை ஆப்ஸ் ஸ்டோரில் பதிவு செய்யச் சொல்லலாம்.
டவுண்லோடு எண்ணிக்கை, பயன்பாடு, ஆப்ஸ் பற்றிய கருத்து ஆகியவை அதிகரித்துக் காணப்படும்போது, அந்த ஆப்ஸ்தான் ஆப்ஸ் ஸ்டோரில் லோடு செய்திருக்கும் ஆப்ஸ்களிலேயே முன்னிலையில் இருக்கும்.
இன் ஆப்ஸ் பர்சேஸ்!
ஆப்ஸை உருவாகும்போது ‘இன் ஆப்ஸ் பர்ச்சேஸ்’ கான்செப்ட்டை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதாவது, ஒரு ஆப்ஸை அப்கிரேடு செய்யும்போது, மேலும் சில கட்டணத்துடன் கூடிய சேவைகளைத் தங்களின் வாடிக்கையாளர்களுக்குத் தர நினைத்தால், அதற்கான வருமானத்தை ‘இன் ஆப்ஸ் பர்ச்சேஸ்’ மூலம் பெறமுடியும்.
உதாரணத்துக்கு, ஃபிட்னஸ் நிலையத்தின் ஆப்ஸை அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருப்பதாகக் கொள்வோம். அதை அப்கிரேடு செய்யும்போது, உடற்பயிற்சி குறித்தும், உணவுமுறைகள் குறித்தும் டிப்ஸ் வழங்க நினைக்கிறார்கள். இதற்கு மாதம் 100 ரூபாய் கட்டணத்தைப் பெற இருப்பதாகக் கொள்வோம்.
இதை அப்கிரேடு செய்யும்போது வாடிக்கையாளர்களுக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் தெரியப்படுத்தலாம். அவர்கள் அந்த சேவையைப் பயன்படுத்த நினைக்கும்பட்சத்தில் ஆப்ஸ் ஸ்டோர் வழியாகக் கட்டணத்தைச் செலுத்தலாம். இதற்கு முன்னமே உருவாக்கி இருக்கும் ஆப்ஸில் ‘இன் ஆப்ஸ் பர்ச்சேஸ்’ வசதி இருக்க வேண்டும்” என்றார்.
விசிட்டிங் கார்டுகளில் ஆப்ஸ்கள்!
அடுத்ததாக, ஆப்ஸ் மூலமாகச் செய்யும் பிசினஸ் குறித்தும், அது சார்ந்த டெக்னிக்கல் விஷயங்கள் பற்றியும் அம்ரிதா பி ஆன்லைன் (Amrithaa Be online) நிறுவனத்தின் சிஇஓ, வி.ஜி.சுப்ரமணியனிடம் பேசினோம்.
‘‘ஒருவருடைய தொழில் ரீதியான, வேலைரீதியான விவரங்களை உள்ளடக்கிய விசிட்டிங் கார்டில், கம்பெனியின் பெயர், செல்போன் நம்பர், இ-மெயில் முகவரி என பல முக்கிய விஷயங்கள் இருக்கும். ஆனால், இனிவரும் விசிட்டிங் கார்டுகளில் நிறுவனங்களின் ஆப்ஸ் குறியீடும் தவறாமல் இடம்பெறும் காலம் தொலைவில் இல்லை.
காரணம், இன்றைய நிலையில் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர் களில் பெரும்பாலானவர்கள் ஆப்ஸ் மூலமாகத்தான் தங்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்து வருகிறார்கள். இன்றைய நிலையில் இருக்கும் 2ஜி, 3ஜி இணையதள சர்வீஸ்களிலேயே பல லட்சம் ஆப்ஸ்கள் அதிவேக மாக இயங்கி வருகின்றன.
அடுத்து 4ஜி அலைகற்றைச் சேவை நடைமுறைக்கு வரும்பட்சத்தில் ஆப்ஸ்களின் பயன்பாடு இன்னும் கூடுதல் வேகம் பெறும்.
இன்றைய நிலையில் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்பவர் கள், தங்கள் நிறுவனத்தின் பெயரில் ஆப்ஸை உருவாக்கி, அதை வாடிக்கையாளர்களிடம் அறிமுகப்படுத்துவதன் மூலம் லாபத்தை பலமடங்கு அதிகப் படுத்தலாம்.
ஆப்ஸ் மூலம் ரியல் எஸ்டேட் பிசினஸை அறிமுகப் படுத்தும்போது வாடிக்கையாளர் களுக்கு நம்பிக்கை பெருகும். இடம், விற்பனைக்கு இருக்கும் வீடுகளின் புகைப்படங்களை ஆப்ஸ்களில் பதிவிட்டு வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும் அந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். வீடு அமைந்துள்ள இடம், அருகில் இருக்கும் வசதி வாய்ப்புகள் குறித்த வரைபடங்களை ஆப்ஸினுள் அமைத்திருந்தால் கூடுதல் சிறப்பு” என்றவர், ஆப்ஸின் வகைகளை விளக்கினார்.
இரண்டு வகை ஆப்ஸ்கள்!
ஆப்ஸை பொறுத்தவரை, நேட்டிவ் ஆப்ளிகேஷன் (Native application) மற்றும் கிராஸ் பிளாட்ஃபார்ம் ஆப்ளிகேஷன் (Cross platform application) என இரண்டு வகை இருக்கின்றன. நேட்டிவ் ஆப்ளிகேஷன் என்பது ஒவ்வொரு ஆப்ஸ் ஸ்டோருக்கும் தனியாக ஆப்ஸை உருவாக்கும் முறையாகும். ஆனால், கிராஸ் பிளாட்ஃபார்ம் ஆப்ளிகேஷன் என்பது, ஒரு ஆப்ஸை உருவாக்கி அதை அனைத்து ஆப்ஸ் ஸ்டோர்களுக்கும் ஏற்றார்போல மாற்றிக்கொள்ளும் வசதி.
அதேபோல, இன்டர்நெட் உதவியில்லாமல் இயங்கக்கூடிய ஆப்ஸ் (இந்த ஆப்ஸ்களை டவுண்லோடு செய்ய மட்டும் இன்டர்நெட் வசதி தேவைப் படும்), இன்டர்நெட் உதவியுடன் இயங்கும் ஆப்ஸ் என இரண்டு வகைகளில் ஆப்ஸ்களை உருவாக்க முடியும். இதில் இன்டர்நெட் வசதி இல்லாத ஆப்ஸ்கள் பெரும்பாலும் கேம்ஸ் போன்ற பொழுதுபோக்கு ஆப்ஸ்களாகவே இருக்கும்.
வேலைக்கான கன்சல்டன்ஸி நிறுவனங்களை அமைப்பவர்கள், டுடோரியல் கல்வி நிறுவங்கள், டியூசன் சென்டர்கள், கோச்சிங் சென்டர்களை அமைப்பவர்கள் தங்களுக்கான ஆப்ஸ்களை உருவாக்கி, அதன் மூலம் தங்களின் மாணவர்களுக்குப் பயிற்சிகளை வழங்க முடியும். மாணவர்களை ஒருங்கிணைத்து ஆப்ஸ் மூலம் எளிமையான தேர்வுகளைக்கூட நடத்தும் படியாக ஆப்ஸ்களை உருவாக்கிக் கொள்ளலாம். அதன் மூலம் அவர்களுக்கு பாடம் நடத்துவது, குறிப்புகளை வழங்குவது போன்ற அனைத்து விஷயங்களையும் செய்ய முடியும்.
ஆப்ஸ் மூலம் ரீடெய்ல் பிசினஸ் செய்பவர்கள், ஆர்டர் செய்திருக்கும் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விரைவில் சேர்க்க தேவையான போக்குவரத்து விஷயங்களில் வேகமாக இருக்க வேண்டியது அவசியமாகும்” என்றார்.
எதிர்கால வர்த்தகம் ஆன்லைனைத்தான் நம்பி இருக்கிறது என்பதை சரியாக புரிந்துகொண்டவர்கள், இனியும் தாமதிக்காமல் ஆப்ஸ் மூலம் தங்கள் வாடிக்கையாளர்களை சென்று சேருவதற்குத் தேவை யான ஆப்ஸ்களை உருவாக்கிக் கொள்வதே சரி. இந்த ஆப்ஸ் மூலம் மட்டுமே இன்னும் அதிகமான வாடிக்கையாளர் களை பெற முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆப்ஸ் உருவாக்கும்போது..!
* ஆப்ஸ்கள் எளிமையாக கையாளக்கூடியதாகவும், வேகமாக டவுண்லோடு ஆகும்படியாகவும் இருக்க வேண்டும்.* ஆப்ஸின் அளவு குறைவானதாக இருக்க வேண்டியது அவசியம்.
* அனைத்துவிதமான மொபைல்களில் இயங்கும் விதமாக ஆப்ஸ்களின் வடிவமைப்பு இருக்க வேண்டும்.
* ஆப்ஸ்களை உருவாக்கும்போது, ஆப்ஸ் மூலம் பிசினஸ் வளர்ச்சியை எதிர்பார்ப்பதுபோல, அந்த ஆப்ஸினால் வருமானம் ஈட்டுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. நமது ஆப்ஸில் விளம்பரங்களை அனுமதிப்பதன் மூலமும், கட்டணத்துக்குரிய ஆப்ஸாக உருவாக்குவதன் மூலமும் நம்மால் வருமானத்தை ஈட்ட முடியும்.
‘‘ஒரே ஆண்டில் மூன்று மடங்கு வளர்ந்திருக்கிறோம்!’’
கணேஷ் வாசுதேவன், சிஇஓ, IndiaProperty.com
“கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் India Property Real Estate App
என்கிற பெயரில் ஒரு ஆப்ஸை வாடிக்கையாளர்களுக்காக வெளியிட்டோம். இன்று ஒரு
லட்சம் பேர் இந்த ஆப்ஸை டவுண்லோடு செய்து பயன்படுத்தி வருகிறார்கள்.
வீடுகள், வீட்டுமனைகள், அலுவலகங்கள் ஆகியவற்றை வாங்க நினைப்பவர்களுக்கான
ஆப்ஸ் இது. இன்றைய நிலையில் எங்களது மொத்த வாடிக்கையாளர்களில் 35-45%
வாடிக்கையாளர்கள் இந்த ஆப்ஸை பயன்படுத்துகிறார்கள். கடந்த 12 மாதங்களில்
மட்டும் ஆப்ஸை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு
அதிகரித்துள்ளது.’’‘‘ஆப்ஸ் மூலம் அதிக வருமானம் கிடைக்கிறது!’’
சாய் சித்ரா, சிபிஎம்ஓ, Baratmatrimony.com
“மொபைல் போன்களில் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் அதிகம் என்பதால்
அவர்களுக்கு எளிமையாகப் பயன்படுத்தும் வகையில் Bharat Matrimony என்கிற
பெயரிலேயே ஆப்ஸ் ஒன்றை 2012-ல் வெளியிட்டோம். தற்போது எங்களது
வாடிக்கையாளர்களில் 60% பேர் இந்த ஆப்ஸையும், 40% பேர் வலைதளத்தையும்
பயன்படுத்தி வருகிறார்கள். எங்களது நிறுவனத்துக்கு வலைதளம் மூலம்
கிடைக்கும் வருமானத்தைவிட ஆப்ஸ் மூலம் கிடைக்கும் வருமானமே அதிகம்.
வலைதளத்தைப் பயன்படுத்துவதைவிட ஆப்ஸை பயன்படுத்துவது எளிமையாகவும், நேரத்தை
மிச்சப்படுத்துவதாகவும் இருப்பதாகச் சொல்கிறார்கள் எங்கள்
வாடிக்கையாளர்கள்.’’நன்றி...
No comments:
Post a Comment