Logo Design by FlamingText.com
Logo Design by FlamingText.com

Friday, May 15, 2015

விண்டோஸ் போனை மட்டும் நம்பியிருந்தால் போதாது என மைக்ரோசாப்ட் முடிவுக்கு வந்துவிட்டது போலும். அதுதான் தனது பிரபலமான செயலிகளில் ஒன்றான ஆபீஸ் லென்சை ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்குக் கொண்டுவந்துள்ளது. அடிப்படையில் இந்தச் செயலி ஸ்மார்ட் போன் காமிரா வசதியைக் கொண்டு அதை ஸ்கேனராக மாற்ற வழிசெய்கிறது. விசிட்டிங் கார்டில் தொடங்கி, ரொக்க ரசீதுவரை பல முக்கிய ஆவணங்களை இதில் ஸ்கேன் செய்து கிளவுட்டில் சேமித்துக்கொள்ளலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஏற்கெனவே விண்டோஸ் போன்களில் செயல்படும் இந்தச் செயலியை இப்போது ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. ஆவணங்களை ஸ்கேன் செய்வதோடு அவற்றை மேலும் எடிட் செய்து மேம்படுத்தும் வசதியும் இருக்கிறது. ஸ்கேன் செய்யும் படத்தை வேர்ட் பைலாக, பிடிஎப் கோப்பாக அல்லது பவர்பாயிண்டுக்கு ஏற்ற வடிவிலோ மாற்றிக்கொள்ளலாம். நேராக ஒன் டிரைவில் சேமித்துக்கொள்ளலாம். குறிப்புகளை ஸ்கேன் செய்துகொண்டால் பின்னர் அவற்றைத் தேடிப் பார்க்கும் வசதியும் இருக்கிறது. ஆண்ட்ராய்டுக்கு முன்னோட்ட வடிவில் அறிமுகமாகியிருக்கிறது. ஆபீஸ் லென்ஸ் பற்றி அறிய: http://blogs.office.com/2015/04/02/office-lens-comes-to-iphone-and-android/

No comments:

Post a Comment