வாஷிங்டன்: உலகில் ஸ்மார்ட் போன் விற்பனையில் ஆப்பிளை நிறுவனத்தை
பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது சாம்சங்.
2015 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 82.4 மில்லியன் ஸ்மார்ட் போன்களை
விற்பனை செய்துள்ளது சாம்சங் நிறுவனம்.
இது மொத்த ஸ்மார்ட் போன் விற்பனையில் 24.5 சதவீதமாகும்.
கடந்த ஆண்டை
ஒப்பிடும் போது இது 7 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
Samsung regains lead over Apple in Smart phone market
2014 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டை ஒப்பிடும் போது ஆப்பிளின் விற்பனை
சரிந்துள்ளது.
இந்த காலாண்டில் 61.2 மில்லியன் ஸ்மார்ட் போன்களை விற்பனை
செய்துள்ளது இந்த நிறுவனம்.
அனைத்து நிறுவனங்களையும் சேர்த்து ஸ்மார்ட் போன்களின் விற்பனை 16.7 சதவீதம்
அதிகரித்துள்ளது. இந்த காலாண்டில் மட்டும் 337 மில்லியன் ஸ்மார்ட் போன்கள்
விற்பனை செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment